வரிசையாக தமிழ் படங்களில் ஒப்பந்தமாகும் ராய் லட்சுமி!

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 12:59 pm

raai-laxmi-announces-her-next-tamil-film

கடந்த சில வருடங்களாக நடிகை ராய் லட்சுமியின் மார்க்கெட் 'டல்லடிக்கிறது'. 2014-ல் வெளியான அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. இதற்கிடையே பெங்களூர் நாட்கள், செளகார் பேட்டை, ஆகியப் படங்களில் நடித்திருந்த ராய் லட்சுமி, மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். 

தற்போது நீயா 2, யார், சின்ட்ரெல்லா ஆகியப் படங்களிலும், மூன்று மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ராய் லட்சுமி. 'முருகா' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் நடிகர் ஶ்ரீகாந்த், ஹீரோவாக நடிக்கிறார். பன்னீர்செல்வம் என்பவர் இயக்குகிறார். 

— RAAI LAXMI (@iamlakshmirai) December 1, 2018

இதனை ட்விட்டரில் அறிவித்திருக்கும் ராய் லட்சுமி, குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close