பேட்ட - மீண்டும் இணைந்திருக்கும் 'மேஜிக்கல் காம்போ'!

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 01:11 pm

marana-mass-sung-by-the-legendary-spb-and


நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இவரின் அடுத்தப் படமான 'பேட்ட' திரைப்படமும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 

எந்திரன் படத்தைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக ரஜினியின் பேட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமத்துள்ளார். 

இந்நிலையில், இதில் இடம்பெற்றிருக்கும் "மரண மாஸ்" என்ற முதல் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை பாடியிருப்பவர்கள் யாராக இருக்கும்? என ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார். ரசிகர்கள் அதற்கு பெரும்பாலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் - அனிருத் என பதிலளித்திருந்தார்கள். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அடுத்த ட்வீட்டைப் போட்ட தயாரிப்பு நிறுவனம், "நீங்கள் சொன்னது சரி தான், மரண மாஸ் தலைவர் குத்து பாடலை லெஜண்ட் எஸ்.பி.பி-யும் அனிருத்தும் பாடியிருக்கிறார்கள்" என உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதனை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். 

பொதுவாக ரஜினியின் அறிமுக பாடலை எஸ்.பி.பி பாடுவது வழக்கம். கபாலி, காலா, 2.0 ஆகிய படங்களில் அது மிஸ் ஆனது. அந்த 'மேஜிக்கல் காம்போ' பேட்ட திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close