மோகன்லாலின் 'ஒடியன்' தேதி அறிவிப்பு

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 02:37 pm
mohanlal-s-odiyan-release-date

நீரலி படத்திற்கு பிறகு மலையாள நடிகர் மோகன் லால் நடித்து வரும் திரைப்படம் ‘ஒடியன்’. இத்திரைப்படத்தின்  இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், சித்திக், இன்னொசன்ட், நரேன், கைலாஷ், சனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஆசிர்வாத் சினிமாஸ்’ நிறுவனம் இதனை மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. எம்.ஜெயச்சந்திரன் பாடல்களுக்கும் சாம்.சி.எஸ் பின்னணிக்கும் இசையமைத்திருக்கிறார்கள், ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜான் குட்டி எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார். தேசிய விருது பெற்ற ஹரிகிருஷ்ணன் இதற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஃபேன்டஸி த்ரில்லரான இதனை 3D தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஏற்கனவே இதன் போஸ்டர், டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், வரும் டிசம்பர் 14-ம் தேதி 'ஒடியன்' ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close