நான்காண்டுகளுக்குப் பிறகு மனைவியுடன் நான்: ரித்தேஷ் தேஷ்முக்

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 03:47 pm
genilia-and-riteish-deshmukh-on-screen-after-4-years

இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் ஹரிணியாக அறிமுகமாகி, விஜய்யுடன் சச்சின், வேலாயுதம்,  ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தம புத்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா. 

இவர் தன்னுடன் முதல் படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்தார். இவர்களுடைய திருமணம் கடந்த 2012-ல் நடந்தது. அப்போது ஜெனிலியாவுக்கு 25 வயது. ரித்தேஷ் - ஜெனிலியா தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். 

திருமணத்திற்குப் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வந்த ஜெனிலியா, 2014-ல் வெளியான லாய் பஹாரி என்ற மராத்தி படத்தில் ரித்தேஷுடன் 'கேமியோ'வில் வந்திருப்பார். 

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரித்தேஷுடன் 'மெளலி' என்ற மராத்தி படத்தில் ஒரு பாடலில் தலை காட்டியிருக்கிறார் ஜெனிலியா. அந்த பாடல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ரித்தேஷ், "4 ஆண்டுகள் கழித்து என் மனைவி ஜெனிலியாவுடன் இதில் நடித்துள்ளேன். முதல் படத்திலிருந்து இப்போது வரை அவரது 'ஸ்கிரீன் பிரசென்ஸ்' அப்படியே தான் உள்ளது" எனப் புகழ்ந்திருக்கிறார். 

மெளலி படத்தின் தயாரிப்பாளர் ஜெனிலியா என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close