திருமணத்துக்கு தயாரான சர்ச்சை நாயகி!

  திஷா   | Last Modified : 02 Dec, 2018 03:50 pm

rakhi-sawanth-s-wedding


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தலை தூக்கிய 'மீ டூ' பிரச்னையில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனவர் நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர் பாலிவுட் நடிகரும், 'காலா' படத்தின் வில்லனுமான நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் அளித்திருந்தார். 

இந்த நேரத்தில் நானா படேகருக்கு, ஆதரவாகவும், தனுஶ்ரீக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்து 'வான்டடாக' வண்டியில் ஏறினார் பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். இதனால் இரண்டு நடிகைகளும் வார்த்தைகளால் ஒருவரையொருவர் தூற்றிக் கொண்டனர். இப்படி பல சர்ச்சைகளுக்கு பேர் போனவர் ராக்கி. 

அண்மையில் ஒரு மல்யுத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராக்கி, அங்கிருந்த மல்யுத்த வீராங்கனையின் சவாலை ஏற்றுக் கொண்டு, சண்டைபோட வேகமாக சென்று, கடைசியில் அடிவாங்கி எலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on

40 வயதான ராக்கி, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் கலால் என்பவரை வரும் டிசம்பர் 31-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். தனது திருமண பத்திரிக்கையை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் ராக்கி சவந்த், கட்டாயம் அனைவரும் திருமணத்திற்கு வர வேண்டும், ஆனால் தயவுசெய்து பரிசுகளை தவிர்த்து விடுங்கள் எனத் தெரிவித்துள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.