'சர்வம் தாள மயம்' படத்திற்காக ஒரு வருடம் மிருதங்கம் கற்றுக்கொண்ட ஜி.வி!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 12:59 pm
sarvam-thaala-mayam-update

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்திருக்கும் 'சர்வம் தாள மயம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகியத் திரைப்படங்களுக்குப் பிறகு, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜிவ் மேனன் இதனை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். 

நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், 'சர்வம் தாள மயம்' திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடலும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பு பற்றி ராஜீவ் மேனன் கூறுகையில், "இந்தப் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பயங்கரமாக உழைத்துள்ளார். படப்பிடிப்பு செல்வதற்கு முன்பே உமையாள்புரம் சிவராமனிடம் ஒரு வருடம் மிருதங்கம் வகுப்புக்கு ஜி.வியை அனுப்பி வைத்தேன். ஜி.வி.க்கு மிருதங்கம் சொல்லிக் கொடுக்க உமையாள்புரம் சிவராமன் மிகுந்த ஆர்வம் காட்டினார். 

ஜி.வி ஒரு நாள் வரவில்லை என்றாலும் சிவராமன் எனக்கு போன் பண்ணி கேட்பார். அப்பறம் நான் ஜி.விக்கு போன் பண்ணி, `ஜி.வி லேட் பண்ணாம சீக்கிரம் போங்க’னு சொல்லுவேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவறாமல் ஒரு வரு‌ஷம் முழுக்க கிளாஸுக்கு போனார் ஜி.வி’’ என புகழ்ந்து தள்ளியுள்ளார் ராஜீவ். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close