ரூ.400 கோடி வசூல்; ஹாலிவுட் பட சாதனையை தகர்த்த 2.0!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 04:00 pm

2-0-tops-fantastic-the-crimes-of-grindelwald-collection

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கும் படம் தான் 2.0.

உச்சகட்ட  எதிர்பார்ப்பில் வெளியான படம், ரசிகர்கள், விமர்சகர்கள் என எல்லோரது பாராட்டையும் பெற, கோலிவுட், பாலிவுட் என எல்லா பக்கமும் வசூல் சாதனைகளை 2.0 உடைத்து வருகிறது. 

முதல் நாளே இந்தியா முழுக்க சுமார் 75 கோடி கல்லா கட்டிய நிலையில், இரண்டாவது நாள் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கம்மியாகவே வசூலித்தது. ஆனால், சனி மற்றும் ஞாயிறுகளில், ரசிகர்கள் தியேட்டர்களில் குவிய, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலித்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

நான்கு நாள்களில் உலகம் முழுவதும் சுமார் 400 கோடி ரூபாயை எந்திரன் 2.0 வசூல் செய்துள்ளதாக, லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், ஹாரி பட்டர் வரிசையில் எடுக்கப்பட்டு சமீபத்தில் ரிலீசான 'பண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் - க்ரைம்ஸ் ஆப் க்ரிண்டல்வால்ட்' என்ற ஹாலிவுட் படத்தின் வசூலை 2.0 கடந்துள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 10 கோடிக்கும் மேல், ஆந்திரா தெலங்கானாவில் 50 கோடி, இந்தியா முழுக்க படத்தின் இந்தி டப்பிங் மட்டும் 100 கோடி, என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது 2.0.

500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம்,  இவ்வளவு தொகையை வசூலிக்க முடியுமா என கேட்ட அனைவருக்கும், சூப்பர்ஸ்டார் இருக்கும்போது முடியாதென்று எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறது எந்திரன் 2.0.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close