விமர்சனத்துக்குள்ளான திருமண ஜோடி!- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் 

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 04:52 pm
priyanka-chopra-faces-twitter-s-wrath-for-fireworks-after-her-marriage-with-nick-jonas

தீபாவளியின்போது பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பூமிக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது சமூக வலைதளங்களின் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. 

தீபாவளிக்கு முன்னதாக, பட்டாசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, 5 வயது முதல் தாம் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 1ஆம்  தேதி பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகர் நிக் ஜோனாஸ்-ஐ நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது இருவருக்கும் மேற்கத்திய முறைப்படியான திருமண ஒப்புதல் ஏற்றுக்கொண்ட பிறகு, அரண்மனையை சுற்றிலும் ஏராளமான வானவேடிக்கை நிறைந்த பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது முதல் இந்த விவகாரம் ட்விட்டரில் சூடுபிடித்து நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொதித்தெழ காரணமாகிவிட்டது.  முன்னதாக, பட்டாசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா, தீபாவளியின்போது பூமிக்கு நன்மை செய்ய பட்டாசு வெடிக்காமல் இருங்கள் என்றுக் கேட்டுக் கொண்டிருதார். இவர் தீவிர பிராணிகள் நல ஆர்வலரும் கூட. 

 

 

 

ஆனால் இவரது திருமணத்தில் இவ்வாறு பட்டாசு வெடித்து புகை மூட்டத்தை ஏற்படுத்தியத்தை சுட்டிக் காட்டி, ட்விட்டர்வாசிகள் கடுமையாக விமர்சிக்கவும் கிண்டல் பேசவும் தொடங்கினர். 

பிரியங்கா ஆஸ்துமா வந்தது போல அமெரிக்க தெருக்களில் முகமூடி அணிந்து பிரச்சாரம் செய்வார்.  தீபாவளியின்போது மட்டும் வெடிக்கும் பட்டாசு தான் பிரச்சனையை ஏற்படுத்தும்; பிரியங்கா சோப்ரா திருமண விழாவில் வெடிக்கும் பட்டாசு அவருக்கு ஆக்சிஜனை உருவாக்கும். நமக்கு மோனோ ஆக்சைடு போன்ற நச்சு வாயு பரிசாக கிடைக்கும் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து கருத்துக் கூறியுள்ள பாபா ராம் தேவ், பிரபலமாக இருப்பவர்கள் இது போல பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பது மோசமான முன்னுதாரணம் எனக் கூறியுள்ளார். 

அதே போல, பிரியங்கா சோப்ரா - நிக் ஆகியோர் மீது நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close