சிம்டாங்காரனுக்கு போட்டியாக களமிறங்கிய  ‘மரண மாஸ்’... வெளியானது 

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 06:09 pm
petta-sng-released

பேட்ட படத்தின் பாடல் வீடியோ படக்குழுவினரின் அதிகாரப்பூர்வ  யூ டியூப் பக்கத்தில் வெளியானது.

இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் பேட்ட. இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய், அஜித் என முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த அனிரூத் முதன் முறையாக ரஜினியுடன் பேட்ட படத்திற்காக கைகோர்த்துள்ளார். பேட்ட படத்தின் ஆடியோ டிசம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்பாக படத்தின் ‘மரண மாஸ்’ சிங்கிள் டிராக் சன் நெக்ஸ்ட் இணையத்தில் வெளியானது. 

தட்லாங்க தாங்க.... தரலாங்க சாங்க என தொடங்கும் இந்த வீடியோ மரண மாஸ் குத்தாக வெளியாகியுள்ளது. ஸ்லீவ சுருட்டி வரான்... காலரதான் பிரட்டி வரான்.... முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளாரா என்ற பாடல் வரிகள் சிம்டங்காரனுக்கு போட்டியாக வந்துள்ளது என்றால் மிகையாகது. குத்துப்பாடல் வீடியோவில் இசையமைப்பாளர் தனது குழுவுடன் படு குஷியாக பாடலுக்கு இசையமைப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close