இந்தியன் 2-வில் கமல் ஜோடி யார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 07:19 pm
kamal-s-pair-in-indian-2-announced

கமல்ஹாசன் ஷங்கர் காம்போவில் 1996-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் இந்தியன். எந்திரன் 2.0 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, இந்தியன் பார்ட் - 2 எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. அதை ஷங்கரும், கமலும் உறுதி செய்தார்கள். 

இந்த படம் குறித்து மேற்கொண்ட தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், கமல் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துகொண்டு இருந்தார்கள்.

படத்தில் நயன்தாரா கமலோடு ஜோடி சேரப்போவதாக முதலில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சிம்பு, துல்கர் சல்மான் மாதிரி ஒரு பெரிய ஹீரோ, இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது. வரும் டிசம்பர் மாதமே இந்தியன் பார்ட் 2வின் கதை டிஸ்கஷன் துவங்க உள்ளதாக ஷங்கர் ஷங்கரும் அறிவிக்க, இந்தியன் 2 மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

இந்நிலையில், இந்தியன் 2-வில் கமலுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அடுத்த படத்தில் கமலுடன் ஜோடி சேரப்போவதாக, காஜல் அகர்வாலே அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close