'யூ' சான்றிதழ் பெற்ற சர்வம் தாள மயம் திரைப்படம்!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 10:16 am
sarvam-thala-mayam-censor-details

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்திருக்கும் 'சர்வம் தாள மயம்' படம், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜிவ் மேனன் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி 'மியூஸிக்கல் ஃபிலிமாக' எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். 

நெடுமுடி வேணு, வினித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ராஜிவ் மேனனின் மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 

சமீபத்தில் வெளியான இதன் டீசரும், சிங்கிள் ட்ராக் பாடலும்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்புப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சர்வம் தாள மயம் படத்தை சென்சாருக்கு அனுப்பியிருந்தனர் படக்குழுவினர். படத்தைப் பார்த்த அதிகாரிகள் இதற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close