சூர்யாவின் என்.ஜி.கே ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 11:38 am
update-on-ngk-makes-fans-happy

இயக்குநர் செல்வ ராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரண்டு படங்கள் நீண்ட தயாரிப்பில் உள்ளன. 

இதற்கிடையே நடிகர் சூர்யாவை வைத்து என்.ஜி.கே என்ற படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். 
இதில் நடிகைகள் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு என்.ஜி.கே-வை தயாரிக்கிறார்கள். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படம் செல்வராகவனின் உடல்நல பிரச்னைகளால், தள்ளிப்போனது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

‪#NGK Final Schedule‬🙂

A post shared by Prabhu (@prabhu_sr) on

இந்நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தின் கடைசி ஷெட்யூல் படபிடிப்பு துவங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இது முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதனால் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close