புதிய படத்தில் ஐஸ்வர்யா தத்தா!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 01:44 pm
aishwarya-dutta-to-be-paired-opposite-nayanthara-s-hero

சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் சீசனின் கலந்துக் கொண்டு, மக்களிடம் நெகட்டிவ் இமேஜை சம்பாதித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. 

குறிப்பாக 'ராணி மகா ராணி' டாஸ்கில் சக போட்டியாளர் பாலாஜி மீது, குப்பைக் கொட்டியது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பிக்பாஸின் மற்றொரு போட்டியாளர் மஹத்துக்கு ஜோடியாக நடிக்க சமீபத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமானார் ஐஸ்வர்யா. அதனை அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கவுள்ளார்.

தற்போது, மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஐஸ்வர்யா தத்தா கமிட்டாகி இருக்கிறார். இதில் ஹீரோவாக நடிகர் ஆரி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ‘அய்யனார்' பட இயக்குநர் ராஜமித்ரன் இயக்குகிறார். 

நேற்று பூஜையுடன் இதன் படபிடிப்பு துவங்கியுள்ளது. ‘கிரியேட்டிவ் டீம் – க்ளோஸ்டார் கிரியேஷன்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close