ஆன்லைனில் ஐபோன் வாங்கி ரூ.1.25 லட்சம் இழந்த நடிகர் நகுல்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:50 pm
actor-nakkhul-alleges-he-was-duped-by-flipkart-after-receiving-fake-iphone

ஆன்லைனில்  ஐபோன் ஆர்டர் செய்திருந்த நிலையில் போலியான ஐபோன் டெலிவரியாகி உள்ளதாக நடிகர் நகுல் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரூ.1.25 லட்சம் மதிப்பிலான அந்த போன் குறித்து பிளிப்கார்ட் நிறுவனம் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

நடிகர் நகுல் தனது 3ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக தனது மனைவிக்கு ஆன்லைனில் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்ய விரும்பியுள்ளார்.  பிரபல ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான பிளிப்கார்ட்டில் அவர் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்த போனின் மதிப்பு ரூ.1.25 லட்சம். வெளியூருக்கு சென்று திரும்பிய பிறகு டெலிவரியாகி இருந்த போனை திறந்து பார்த்துள்ளார். 

 

— Nakkhul (@Nakkhul_Jaidev) December 2, 2018

 

அப்போது தான் அது மலிவு விலையிலான போலி போன் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நகுல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் தெரிவித்தார். எனினும், இப்பிரச்னையை தீர்க்காமல் அவர்கள் அலைகழித்துள்ளனர். இதுகுறித்து, நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close