மலையாள திரையுலகில் கால் பதிக்கும் கெளரி கிஷன்...!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 02:12 pm

gauri-kishan-s-malayalam-entry

நடிகர் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த அக்டோபரில் வெளியான திரைப்படம் ‘96'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக அதில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தார்கள்.

பள்ளி வயது காதல் காட்சிகளில் இவர்கள் இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்நிலையில் கௌரி கிஷன் புதிய மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

அந்தப் படத்திற்கு ‘அனுக்ரஹீதன் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக சன்னி வெயின் நடிக்க, பிரின்ஸ் ஜாய் என்பவர் இயக்குகிறார். அருண் முரளீதரன் இசையமைக்கவுள்ள இதற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறாராம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.