இந்தியன் 2 தான் எனது கடைசி படம்: கமல்ஹாசன் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 01:59 pm
indian-2-will-be-my-last-movie-as-actor-says-kamalhassan

சங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படம் தான் நடிகராக தனது கடைசி படம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் சங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் இந்தியன். எந்திரன் 2.0 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, இந்தியன் பார்ட் - 2 எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. அதை ஷங்கரும், கமலும் உறுதி செய்தார்கள். 

இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். பின்னர் விமான நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தியன் 2 படமே நான் நடித்து வெளியாகும் கடைசிப்படம். அதன் பின்பு நடிப்புக்கு முழுக்கு போடலாம் என்றிருக்கிறேன். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. 

நடிக்கவில்லை என்றாலும் என்னுடைய படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். மேலும் பல சமூக நலப்பணிகளையும் மேற்கொள்ளும்.

கேரளா எனது சொந்த வீடு போன்றது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல நல்ல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இது போன்று தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலன் என வரும்போது மதச்சார்பற்ற அணிகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close