'பேட்ட' விஜய் சேதுபதியைப் பார்க்க தயாரா?

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 02:58 pm
petta-vijay-sethupathi-poster-release-by-6pm-today

நடிகர் ரஜினியின் அடுத்தடுத்த விருந்துகளால் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள். கடந்த வாரம் ரிலீஸான 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நேற்று ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும், 'மரண மாஸ்' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கொண்டாத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் 'பேட்ட' திரைப்படத்தில், ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை அனிருத். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

நேற்று பேட்ட படத்தின் 'ஃபர்ஸ்ட் சிங்கிள்' ரிலீஸாகியிருக்கும் நிலையில், 7-ம் தேதி இதன் செகண்ட் சிங்கிளும், 9-ம் தேதி மொத்த பாடல்களும் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

— Sun Pictures (@sunpictures) December 4, 2018

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதியின் 'லுக்கை' வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியிடப்படுவதாக தற்போது ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள் சன் பிக்சர்ஸ்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close