நாளை வெளியாகும் மாரி 2 ட்ரைலர்..!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 03:16 pm

maari-2-trailer-from-tomorrow

எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, ராம்குமாரின் படம் என படு பிஸியாக இருக்கிறார் நடிகர் தனுஷ். அதோடு நாகர்ஜுனா, சரத்குமார், ஶ்ரீகாந்த் உள்ளிட்டோரை வைத்து படம் ஒன்றையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். 

இதில் மாரி 2 படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கி இருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ரவுடி பேபி' பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தனுஷ் எழுதியிருந்த இந்தப் பாடலை அவரும், பாடகி தீ யும் பாடியிருந்தார்கள். 

இந்நிலையில் இதன் ட்ரைலர் நாளை வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அதோடு இந்தத் திரைப்படம் வரும் 21-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close