டாப்ஸியின் தமிழ் பட ஷூட்டிங் நிறைவு!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 04:15 pm
tapsee-pannu-s-new-movie-completed

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸி. 2015-ல் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் வெளியான 'வை ராஜா வை' திரைப்படத்திற்குப் பிறகு வேறெந்த தமிழ் படங்களிலும் நடிக்காமல் இருந்தார். 

இந்நிலையில் 'கேம் ஓவர்' என்ற படத்தில் டாப்ஸி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவின் நடிப்பில் வெளியான 'மாயா' படத்தை இயக்கியவர். தற்போது இந்தப் படத்தின் படபிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. 

அப்போது படக்குழுவினருடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டாப்ஸி, "மிகவும் சோர்வான ஆனால் ஒரு மிகச்சிறந்த கதையின் படபிடிப்பு முடிந்துள்ளது. நிச்சயம் இது அனைவரிடத்திலும் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்திருக்கிறார். 

A post shared by Taapsee Pannu (@taapsee) on

தவிர, தட்கா, பட்லா, மிஷன் மங்கல் ஆகிய பாலிவுட் படங்களில் டாப்ஸி தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close