விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' படம் துவங்கியது!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 04:48 pm
vikram-s-mahavir-karna-starts

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ஹரியின் ‘சாமி ஸ்கொயர்' படம் சமீபத்தில் வெளியானது. தற்போது இயக்குநர் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்', ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா', ராஜேஷ்.எம்.செல்வாவின் ‘கடாரம் கொண்டான்' ஆகியப் படங்களில் பரபரப்பாக இருக்கிறார். 

இதில் ‘மஹாவீர் கர்ணா' திரைப்படம் இந்தி, தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கப்பட இருக்கிறது. அதோடு இதன் பட்ஜெட் ரூ.300 கோடி எனவும் கூறப்படுகிறது. வரலாற்று காலத்தை மையப்படுத்திய இந்தப் படத்தை ‘யுனைடெட் ஃபிலிம் கிங்டம்' நிறுவனம் தயாரிக்கிறது.

திருவனந்தபுரத்தில் நேற்று இதன் பூஜை போடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் சுரேஷ் கோபி, உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விரைவில் இதன் படபிடிப்பைத் தொடங்கி, அடுத்தாண்டு டிசம்பரில் மஹாவீர் கர்ணா திரைப்படத்தை திரையிட இருக்கிறார்கள் படக்குழுவினர். 

அதோடு இந்தப் படத்திற்கு சர்வதேச தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு VFX பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close