கிறிஸ்துமஸ் ரேஸில் பின்வாங்கிய அதர்வா!

  திஷா   | Last Modified : 04 Dec, 2018 05:51 pm

boomerang-release-date

நடிகர் தற்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது பூமரங், ருக்குமணி வண்டி வருது, ஒத்தைக்கு ஒத்தை, 100, குருதி ஆட்டம் ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் பூமரங் படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குகிறார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

மசாலா பிக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கண்ணனே இதனைத் தயாரித்திருக்கிறார். அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் பூமரங் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிரசன்னக்குமார் ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே இதனை எடிட் செய்திருக்கிறார். 

வரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக 21-ம் தேதி பூமரங் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 28-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.  

இதற்கிடையே விஜய் சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணுவின் சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெயம் ரவியின் அடங்கமறு ஆகிய படங்கள், டிசம்பர் 21-ல் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.