ஜி.வி இசையில் பாடகி அவதாரம் எடுக்கும் அதிதி

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 09:50 am
aditi-rao-sang-for-gv-prakash

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை அதிதி ராவ் ஹைதரி தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த படம் காற்று வெளியிடை. இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. 

அந்த படத்தின் ப்ரோஷனுக்காக அவர் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடல் ஒன்றை பாடினார். அப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தனக்கு சினிமாவில் பாடல் பாடும் ஆசை இருக்கிறது என்றும் அதிதி கூறி இருந்தார். தற்போது அந்த ஆசை நிறைவேறி உள்ளது. 

 

 

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயில் படத்திற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் தான் அதிதி பாடல் ஒன்றை பாடி உள்ளார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காத்தோடு என்று  தொடங்கும் இந்த பாடலில் ஜி.வி.யுடன் அதிதி டூயட் பாடி உள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close