சீனாவில் மிக பிரமாண்டமாக வெளியாகும் '2.0'!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 10:58 am
2-0-to-release-in-56-000-screens-in-china

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இதனை இயக்குநர் ஷங்கர் இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம், இதுவரை 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

இந்நிலையில், 2.0 சீனாவிலும் வெளியாக இருக்கிறது. ஆனால் இப்போது அல்ல, அடுத்தாண்டு கோடையைக் குறி வைத்து மே மாதம் திரையிடப்பட இருக்கிறது. 

அங்கு மொத்தம் 10,000 திரையரங்குகளில், 56,000 ஸ்கிரீன்களில் வெளியாகவிருக்கிறது. இதில் 47,000 ஸ்கிரீன்களில் 3டி ஃபார்மட்டில் வெளியாகிறது. சோனி, டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த ஹெச்.ஒய் மீடியா என்ற நிறுவனம் லைகாவிடம் சீனா வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறதாம். 

இதனால் ஏற்கனவே சீனாவில் சாதனைப் படைத்த இந்திய படங்களான தங்கல், பி.கே ஆகிய படங்களின் வசூல் சாதனையை சிட்டி முறியடிப்பான் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close