ஜெ-வாக நித்யாமேனன் - 'அயர்ன் லேடி' ஃபர்ஸ்ட் லுக்!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 12:42 pm
iron-lady-first-look

நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்து, கட்சியைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மர்மமான மரணமாக அவரது வாழ்க்கை முடிந்து விட்டது. இன்று அவரின் 2-ம் ஆண்டு நினைவு தினம். 

வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது ஏற்கனவே நாம் அறிந்தது தான். லிங்குசாமி, ஏ.எல்.விஜய், பிரியதர்ஷினி உள்ளிட்ட இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குவதாக செய்திகள் வெளியாகின. அதில் பிரியதர்ஷினி இயக்குவதாக சொல்லப்பட்ட படத்தின் படபிடிப்பு மட்டும் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இவர் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தவிர, வரலக்‌ஷ்மியை வைத்து சக்தி என்ற படத்தையும் இயக்கி வருகிறார். 

தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இன்று அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க-வினரிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close