கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'கனா'!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 01:44 pm
kanaa-releases-on-dec-21st

நடிகர் சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பாக 'கனா' என்ற திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இதனை இயக்கியிருக்கிறார். நடிகர், காமெடியன், பாடகர், பாடலாசிரியர் என்பதைத் தாண்டி தற்போது இயக்குநராகவும் களம் இறங்கியிருக்கிறார் அருண். 

ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. 
 இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். கனவை நனவாக்க ஏங்கும் மகள், அவளுக்கு உறுதுணையாக நிற்கும் தந்தை என்ற களத்தில் சிறப்பான 'ஸ்போர்ட்ஸ் ட்ராமா'வாக இது இயக்கப்பட்டிருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு இசை திபு நிணன் தாமஸ்.

இந்நிலையில் கனா திரைப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு, வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close