துப்பாக்கி 2 படத்திற்கு உறுதியளித்த ஏ.ஆர்.முருகதாஸ்!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 03:19 pm
ar-murugadoss-makes-a-breaking-statement-on-thuppakki-2

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். துப்பாக்கி, கத்தி ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இவர்களின் கூட்டணி சர்காரில் இணைந்திருந்தது. 

இந்நிலையில் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களின் கிளைமேக்ஸும், அடுத்த பாகத்திற்கு லீட் கொடுக்கும்படி அமைந்திருக்கும். அப்படியென்றால் இதன் இரண்டாம் பாகங்கள் வெளிவருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஏற்கனவே ப்ளாக் பஸ்டர் படமான படங்களை மறுபடியும் இயக்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். அடுத்த பாகத்தை எடுக்க சொல்லி பொறி தட்டினால், துப்பாக்கியை எடுக்கலாம்" என அவர் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸின் இந்த பதிலால் உற்சாக கடலில் மூழ்கி இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close