அய்யா ரசிகர்களுக்கு 'சீதக்காதி' குழுவினர் நடத்தும் கான்டெஸ்ட்!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 04:02 pm
seethakathi-premier-show-contest

நடிகர் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில், 25-வது திரைப்படமாக 'சீதக்காதி' இயக்கப்பட்டிருக்கிறது. இதனை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்க, கோவிந்த் வஸந்தா இசையமைத்திருக்கிறார். 

சீதக்காதி திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் அய்யா எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் மெழுகு சிலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, எக்ஸ்பிரஸ் மாலில் திறக்கப்பட்டது. 

— Passion Studios (@PassionStudios_) December 5, 2018

தற்போது ரசிகர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள் சீதக்காதி குழுவினர். அதாவது சீதக்காதி திரைப்படத்தின் 'ப்ரீமியர்' காட்சியைப் பார்க்க விரும்புபவர்கள், அய்யா மெழுகு சிலையுடன் புகைப்படம் எடுத்து, #Seethakaathi என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, பேஸன் ஸ்டூடியோஸ் மற்றும், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் சமூக வலைதள பக்கங்களில் டேக் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் 100 அதிர்ஷ்டசாலி ரசிகர்கள் சீதக்காதி திரைப்படத்தின் 'ப்ரீமியர்' ஷோ-வைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள் என இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close