தளபதி 63-க்கான பயிற்சிகளில் ஈடுபடும் விஜய்!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 05:00 pm
vijay-starts-physical-preparation-for-thalapathy-63

நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. அவரது கரியரில் 62-வது படமான இதனை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க அரசியல் களத்தில் இயக்கப்பட்டிருந்த இந்தப் படம் அதிக வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றிருந்தது. 

இந்நிலையில் விஜய்யின் 63-வது படத்தை இயக்குநர் அட்லீ இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெறி, மெர்சல் ஆகியப் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இவர்கள் இணைகிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதனை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மெர்சல், சர்கார் ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய்யின் இந்தப் படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இந்நிலையில் விஜய் 63 படத்தைப் பற்றி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில், பயிற்றுவிப்பாளராக விஜய் நடிக்கிறாராம். அதற்காக பல 'பிஸிக்கல் ஃபிட்னெஸ் ட்ரெயினிங்கில்' தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கிறாராம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close