2018-ம் ஆண்டின் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சர்கார்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 05:14 pm
south-indian-films-lead-top-10-indian-hashtags

2018 ஆம் ஆண்டின் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சர்கார் திரைப்படம் முதலிடைத்தை பெற்றிருக்கிறது. மேலும் முதல் 10 இடங்களை தென்னிந்திய சினிமாக்கள் கைப்பற்றியிருக்கின்றன. 

இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் இந்த ஆண்டில் நடைபெற்ற டாப் 10 அரசியல் நிகழ்வுகள், வெளியான திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸையும் ரசிகர்களின் மனதையும் அள்ளிய திரைப்படங்கள் என்ன என்பது வெளிவர தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிரபல சமூக வைலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டான முதம் 10 இடங்கள் பிடித்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. சர்காரை அடுத்த 9 திரைப்படங்களும் தென்னிந்தியாவை சேர்ந்தன. தமிழக அரசின் திட்டங்களையும், இன்றைய அரசியல் நகர்வுகளையும் வெளிச்சம்போட்டு காட்டிய திரைப்படம் என்பதால் சர்காருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. பல தடைகளை மீறி வெளிவந்த திரைப்படம் குறித்து ட்விட்டரில் அதிக பகிரப்பட்டதாகவும், இதனால் ட்ரெண்டிங்கில் வந்ததாகவும் கூறப்படுகிறது. சர்கார் படத்தை அடுத்து விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் பரத் அனே நேனு, நான்காவது இடத்தில் அரவிந்த் சமேதா, 5 ஆவது இடத்தில் ரங்கஸ்தலம் மற்றும் 6 ஆவது இடத்தில் காலா ஆகிய படங்களில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளன.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close