பேட்ட - நவாஸுதீன் சித்திக்கின் கதாபாத்திரம் இன்று வெளியீடு!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 05:14 pm
petta-nawazuddin-siddiq-s-character-reveals-by-6pm

காலா, 2.0 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசை அனிருத். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

பேட்ட படத்தின் போஸ்டர்கள், 'ஃபர்ஸ்ட் சிங்கிள்' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றிருக்கும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நவாஸுதீன் சித்திக்கின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

முன்னதாக நேற்று விஜய் சேதுபதியின் தோற்றம் வெளியிடப்பட்டது. பேட்ட திரைப்படத்தில் 'ஜித்து' என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close