என்னுடைய குரல் ரஜினிக்கு என்பதால் மகிழ்ச்சி - எஸ்.பி.பி

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 06:20 pm
spb-on-petta-song

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட' திரைப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ரஜினியின் 165-வது படமான இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். 

தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பேட்ட படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மரண மாஸ்' என்ற பாடல் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்த இப்பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் அனிருத் இணைந்து பாடியிருந்தனர். இது குறித்து பேசியிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “இந்தப் பாட்டில் என்னுடைய போர்ஷன் கம்மி தான் என எனக்கே தெரியும். ஆனால், நான் பாடியது ரஜினிகாந்தோட குரலுக்கு என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close