பேட்ட - நவாஸுதீன் சித்திக்கின் கேரக்டர் வெளியீடு!

  திஷா   | Last Modified : 05 Dec, 2018 06:11 pm

nawazudin-s-character-revealed

இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட'. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

 இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். 

இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வெளியான நிலையில், தற்போது நவாஸுதீன் சித்திக்கின் கதாபாத்திரம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'சிங்கார் சிங்' என்ற கேரக்டரில் இவர் நடிப்பது இதன் மூலம் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. 

— Sun Pictures (@sunpictures) December 5, 2018

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் 'பேட்ட' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.