ஜெர்மனியை அதிரவைத்த ‘தல’- இன் புதிய கண்டுப்பிடிப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Dec, 2018 07:02 pm
vario-helicopters-germany-lauds-thala-ajith

நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் ஆர்வத்தை காட்டும் அஜித், அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா எனப்படும் ஆளில்லா விமான குழுவின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் பல சாதனைகளை புரிந்து வரும் தக்‌ஷா குழு அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள வேரியோ ஹெலிகாப்டர் என்னும் நிறுவனத்திற்கு அஜித் சென்றுள்ளார். இதையடுத்து வேரியொ நிறுவனத்தில்ன் ஃபேஸ்புக் பக்கத்தில், “ஆர்வத்திற்கு எல்லைகள் ஏதும் இல்லை. தனது படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற பின், விமானம் மூலம் கிராபென்டார்ப் நகருக்கு வந்தார். எங்களுடன் சில நாட்கள் செலவிட்டார். வேரியோ ஹெலிகாப்டர்கள் அஜித்தின் கனவு. அவர் தன்னுடைய சொந்த உழைப்பில் ஹோட்டல் அறையிலேயே வேரியோ மாடல்களை உருவாக்கியுள்ளார்” என பாராட்டி பதிவிட்டுள்ளது. 

ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து இந்தியா, ஜெர்மனி நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் இந்த புதிய கண்டுப்பிடிப்பை வேரியோ நிறுவனம் அங்கீகரித்து ஹெலிகாப்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை விரைவில் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close