2.0 படத்தில் காட்டுவது போல ஆரா உண்மையா..? எழுத்தாளர் சுஜாதா கூறியது என்ன?

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 03:11 pm
is-aura-exist-what-sujatha-says

ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் வருவது போல ஆரா  உண்மையா? என்பது குறித்து எழுத்தாளர் சுஜாதா கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 2.0. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்‌ஷய் குமார் பல பறவைகளின் ஆராக்களை சேர்த்து பிரமாண்ட சக்தியாக உருமாறுவார். மேலும் படத்தில் ஆரா குறித்து வசீகரன் காதாபத்திரம் தனியாக விளக்கமளிக்கும். 

இந்நிலையில் இந்த படத்தில் காட்டியிருப்பது போன்று ஆரா என்பது நிஜமா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. மேலும் ஆரா என்ற பெயரில் ஆவியை தான் சொல்கிறார்கள். இது பேய் படம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. 

இந்நிலையில் இதுகுறித்து பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் சுஜாதா வார இதழ் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆரா குறித்து வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சுஜாதா, "ஆரா என்பது புனிதர்களின் புனிதத்தை அடிக்கோடிட்டுக்கு காட்ட சித்திரக்காரர்கள் வரைந்த கற்பனை. யாருக்கும் ஆரா கிடையாது. வேண்டுமென்றால் பின்வெளிச்சம் போட்டு தலையை புஸுபுஸு வாக்கிக் கொண்டு ஆரா காட்டலாம். 

மருத்துவத்துக்கு தெரிந்த ஒரே ஒரு ஆரா- எபிலப்ஸி. வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு வலிப்பு துவங்கும் முன் காதில் கேட்கும் சத்தம், காட்சி. அதையும் ஆரா என்பார்கள். மயக்கமடையுமுன் இயற்கை தரும் முன்னெச்சரிக்கை அது" என தெரிவித்துள்ளார். இதனை ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இது தற்போது வைரலாகி வருகிறது. எந்திரன் படத்தில் சங்கருடன் சுஜாதா இணைந்து பணிப்புரிந்திருப்பார். அவர் இல்லாததால் தான் 2.0 படத்தில் இத்தனை லாஜிக் ஓட்டைகள் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close