இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழ் பிரபலங்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 04:31 pm
top-earners-of-indian-cinema

பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில், ரஜினிகாந்த், விஜய், விஐய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் பலர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. பாலிவுட் நடிகர் நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருந்த இந்த பட்டியலில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இடப்பெற்ற்றுள்ளனர். 

தொடர்ந்து 3வது ஆண்டாக, பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான், இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 228 கோடி ரூபாய் வருவாயுடன் இரண்டாவது இடத்தில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். 2.0 நடிகர் அக்ஷய் குமார் ரூ.185 கோடி சம்பாதித்து 3வது இடத்தில் உள்ளார். சுமார் 113 கோடி ரூபாய் வருவாயுடன், மொத்த பட்டியலில் 4வது இடத்திலும், அதிகம் சம்பாதிக்கும் பெண்ணாகவும் தீபிகா படுகோன் உருவெடுத்துள்ளார். 

தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, பாலிவுட் நடிகர் அமீர் கான், அமிதாப் பச்சன் என பட்டியல் செல்கிறது. உலகம் முழுக்க கலக்கி வரும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 66.75 கோடி ரூபாய் வருவாயுடன் 11வது இடத்தை பிடித்துள்ளார். இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இதில் இடம்பிடித்துள்ளனர். ரூ.50 கோடி வருவாயுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 14வது இடத்திலும், விஜய் 26வது இடத்திலும், விக்ரம் 29வது இடத்திலும் உள்ளனர். ரூ.23.67 கோடியுடன் 34வது இடத்தை சூர்யா மற்றும் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close