'தேவ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி!

  திஷா   | Last Modified : 07 Dec, 2018 09:16 am
dev-frist-single-by-14th

குடும்பப் பின்னணியை மையமாக வைத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்திற்குப் பிறகு, 'தேவ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.  'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் திரையைப் பகிர்ந்துக் கொள்கின்றனர். 

இவர்களுடன் 'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். 

இந்நிலையில் தேவ் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 14-ம் தேதி வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் ஹாரிஸ். அதோடு இதன் முழுப் பாடல்கள் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close