விஸ்வாசம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியது சன் டிவி

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 11:45 am

sun-tv-acquired-viswasam-tv-rights

நடிகர் அஜித்- இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் சன் தொலைக்காட்சி இதன் டிவி உரிமத்தை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வீரம், வேதாளம், விவேகம் படங்களுக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்அப்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். தலு நயன்தாரா என்ற கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. 

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பிரோஷன்கள் அதிமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இருந்தும் பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு பெரிய படங்களும் பொங்கல் அன்று வெளியாகின்றன. எனவே 96 படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் போதே அதனை சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது. 

அதே போல விஸ்வாசம் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே டிவில் போட்டுவிடுவார்கள் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதற்கு முன்பு இந்த கூட்டணியில் வந்த வீரம் படத்தையும் சன் டிவி தான் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.