லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் தளபதி 63 குழுவினர்!

  திஷா   | Last Modified : 07 Dec, 2018 12:05 pm
thalapathy-63-team-at-los-angels

'சர்கார்' திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்க உள்ள இந்தத் திரைப்படம் 'தளபதி 63' என அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே தெறி மற்றும் மெர்சல் திரைப்படத்தில் இணைந்து வேலை செய்திருக்கிறார்கள். 

தளபதி 63-யில் நயன்தாரா ஹீரோயினாகவும், விவேக் காமெடியனாகவும் நடிக்கிறார்கள். இதனை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படபிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது தளபதி 63 குழுவினர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 

இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் தற்போது, தளபதி 63 படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. 

இதனால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close