பேட்ட செகண்ட் சிங்கிள் - 'ஊலாலா' பாடல் ஸ்னீக் பீக்!

  திஷா   | Last Modified : 07 Dec, 2018 12:16 pm
here-is-the-sneak-peek-of-ullaallaa

2.0 திரைப்படத்திர்குப் பிறகு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'பேட்ட'. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய 'மாஸ்' படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். 

பேட்ட படத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகமாக தூண்டியிருக்கின்றன. இந்நிலையில், 'மரணமாஸ்' என்ற இதன் முதல் சிங்கிள், சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு, 'ஊலாலா' என்ற இரண்டாவது பாடல் வெளியாகிறது. தற்போது இதன் 'ஸ்னீக் பீக்' வெளியாகிறது. 'தில்லு முல்லு' திரைப்படத்தில் அலுவலகத்தில் பொய் சொல்லிவிட்டு, கால்பந்தாட்ட மைதானத்தில் நண்பர்களுடன் ஆடி பாடி மகிழ்வார் ரஜினி. அந்த மாதிரி தான் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்ற ரகசியத்தை இதில் அவிழ்த்திருக்கிறார் அனிருத்! 

இதனால் மாலை 6 மணி எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close