ஜீவாவின் படத்தை துவங்கி வைத்த விஜய் சேதுபதி!

  திஷா   | Last Modified : 07 Dec, 2018 01:01 pm

rekka-director-s-next-is-with-jiiva

நடிகர் ஜீவாவின் நடிப்பில் கடைசியாக ‘கலகலப்பு 2' படம் வெளியாகியிருந்தது. தற்போது ‘கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி, நடிகர் அருள்நிதியுடன் ஒரு படம்' என 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டுமொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ஜீவா. 

இந்தப் படத்தை ‘றெக்க' படத்தை இயக்கிய ரத்தின சிவா தான் இயக்குகிறார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி 'கிளாப்' அடித்து படத்தின் முதல் ஷாட்டை துவங்கி வைத்திருக்கிறார். விரைவில் படத்தின் 'டைட்டில்' மற்றும் மற்ற விஷயங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.