ராட்சசன் உட்பட மேலும் 2 படங்களை வாங்கிய சன் டி.வி!

  திஷா   | Last Modified : 07 Dec, 2018 05:07 pm

sun-tv-just-made-a-breaking-announcement

திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த பிறகு, மீண்டும் தொலைக்காட்சிகளில் திரையிடப்படுவது வழக்கம். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்களை வாங்குவதற்கு முன்னணி தொலைக்காட்சிகளில் போட்டி அதிகமாகும். 

அந்த வகையில் தென்னிந்தியாவின் மிகப்பெரும் தொலைக்காட்சி நெட்வொர்க்கான, சன் டி.வி. நிறுவனம் தற்போது ட்விட்டரில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விஷ்ணு விஷாலின் ராட்சசன், விஷாலின் சண்டக்கோழி 2, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களின் சேட்டிலைட் உரிமையை, அவர்கள் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று முக்கிய நடிகர்களின் முக்கிய படங்களை சன் டிவி வாங்கியிருப்பதால் புது வருடத்திற்கு, பொங்கலுக்கு எந்தெந்த படங்களை ஒளிபரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். 

தவிர #Sandakozhi2WithSunTV #RatsasanWithSunTV  #ViswasamWithSunTV என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close