பேட்ட செகண்ட் சிங்கிள் - நீ சிந்திர கண்ணீரும் நிரந்தரமில்லை! தாறுமாறு சாங்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 06:40 pm

petta-second-single-released

பேட்ட படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்கை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். 

2.0 திரைப்படத்திற்குப் பிறகு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'பேட்ட'. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் மிகப்பெரிய 'மாஸ்' படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத். பேட்ட படத்தின் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகமாக தூண்டியிருக்கின்றன. இந்நிலையில், 'மரணமாஸ்' என்ற இதன் முதல் சிங்கிள், சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு, 'ஊலாலா' என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது. 

எத்தன சந்தோசம் தினமும் கொட்டுது உன் மேல... நீ மனசு வச்சிபுட்டா ரசிக்க முடியும் உன்னாலா... நீ சிந்துற கண்ணீரும் நிரந்தரமில்லை... என தொடங்கும் இந்த பாடல் மாஸ் கானாவாக அமைந்துள்ளது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.