ஹீரோவாகிறார் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 08:04 am
bigg-boss-fame-shariq-haasan-to-debut-as-lead

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமான ஷாரிக் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். 

பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக். இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு அதிகம் பிரபலமானார். அவர் நடிகை ஐஸ்வர்யா தத்தாவை காதலிப்பதாக கூறியது பெரிய சர்ச்சையானது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் அவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் நடிக்கவுள்ள படத்திற்கு உக்ரம் என பெயரிட்டுள்ளனர். அட்டு என்கிற படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா அடுத்து இந்த படத்தை இயக்கவுள்ளார்.

அட்டு படத்தில் ஹீரோயினாக நடித்த அர்ச்சனா உக்ரம் படத்தில் ஷாரிக்கின் ஜோடியாக நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close