பேட்ட - என்.ஜி.கே இரண்டுக்குமான ஓர் ஒற்றுமை!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 09:15 am

sony-music-bags-ngk

'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் சூர்யா என்.ஜி.கே என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதனை இயக்குநர் செல்வ ராகவன் இயக்கிக் கொண்டிருக்கிறார். தவிர இவரது நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரண்டு படங்களும் நீண்ட கால தயாரிப்பில் உள்ளன. 

என்.ஜி.கே படத்தில் நடிகைகள் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். 

இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது படத்தின் ஆடியோ உரிமையை 'சோனி மியூஸிக் நிறுவனம்' கைப்பற்றியிருப்பதாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்கள். 

ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தையும் சோனி நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close