2.0 புல்லினங்கால் பாடல் வீடியோ வெளியீடு!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 09:52 am
2-0-pullinangal-song-video

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘காலா' திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 கடந்த வாரம் வெளியானது. 3D தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இயக்குநர் ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். ‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இந்தப் படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்' நிறுவனம் தயாரித்திருந்தது. 

இதில் ரஜினியுடன் இணைந்து, அக்‌ஷய் குமார் மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் 2.0 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் 'புல்லினங்கால்' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமார் வயதான தோற்றத்தில் பறவைகளுடன் திரையைப் பகிர்ந்திருக்கும் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close