"96" தெலுங்கு ரீமேக்கின் ஹீரோயின் இவர் தான்!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 11:45 am

who-is-going-to-replace-trisha-in-96-telugu-remake

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட திரைப்படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்திருந்த இப்படம் பள்ளிப் பருவ காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.  

இதனை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். அதில் இளம் வயது விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க உணர்வுக் குவியலுடன் மெல்லிய சோகத்துடன் வெளிவந்திருந்த 96, பார்வையாளர்களின் கண்களை வியர்க்கச் செய்ய தவறவில்லை. 

தமிழில் வெற்றி பெற்ற "96" திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர்கள் நானி, ராணா, ஷர்வானந்த் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் இறுதியாக பட்டியலில் இல்லாத, கோபிசந்தின் பெயரைதான் டிக் செய்தார் தயாரிப்பாளர்.

சரி ஹீரோயின் யாராக இருக்கும் என்ற கேள்வி வெகுநாளாக ரசிகர்களை யோசிக்க வைத்திருந்த நிலையில், தற்போது தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷாவே நாயகியாக நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close