பிறந்தநாளில் அடுத்தப் படத்தை அறிவிக்கிறார் பா.ரஞ்சித்!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 12:03 pm
pa-ranjith-s-production-2-first-look-today

இளைஞர்களை கவரும் வகையில் ஜாலியான பொழுதுபோக்கு சினிமாக்களை எடுக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர் பா.ரஞ்சித். 'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே, பொழுதுபோக்குடன் சேர்த்து, சமுதாய கருத்துகளையும் வைத்திருந்தார். 

பிறகு நடிகர் கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் அப்பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கையை இயல்பாகக் காட்டியிருந்தார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'கபாலி", "காலா' என அடுத்தடுத்தப் படங்களை இயக்கினார். சமூக வேறுபாடு மற்றும் பிரிவினைகளை பேசிய இந்தப் படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. 

தவிர ரஞ்சித், தனது "நீலம் பண்பாட்டு மையம்" என்ற பேனரில் 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசை நிகழ்ச்சியை நடந்தி வருகிறார். இதற்கிடையே நீலம் புரொடக்‌ஷன் மூலம் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜின், 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை எடுத்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார் ரஞ்சித். 

இன்று தனது 36 -வது பிறந்தநாளைக் கொண்டாடும் இயக்குநர் ரஞ்சித்திற்கு, சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

இதற்கிடையே, நீலம் புரொடக்‌ஷனின் அடுத்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார் ரஞ்சித். இதனால் அதீத எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close