விஷால் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு காவல்துறை தடை

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 12:11 pm
police-prohibited-the-shooting-of-vishal-s-film

நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு விழுப்புரத்தில் காவல் துறையினர் தடைவிதித்தனர். 

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற "டெம்பர்" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஷால் நடத்தி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கூனிமேடு என்கிற இடத்தில் உள்ள ஒரு மசூதி அருகில் வியாழக்கிழமை படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஆனால், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு கருதி காவல்துறையினர் இந்த படப்பிடிப்புக்கு தடை விதித்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close