சன் பிக்சர்ஸுக்கு துருவ் விக்ரமின் கோரிக்கை!

  திஷா   | Last Modified : 08 Dec, 2018 01:46 pm
dhruv-vikaram-s-request-for-sun-pictures

'2.0' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினியின் 'பேட்ட' ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

ரஜினியுடன் இணைந்து விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை அனிருத். 

ஏற்கனவே 'மரண மாஸ், உல்லாலா' என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கின்றன. இந்நிலையில் 'பேட்ட' படத்தின் முழு ஆடியோவும் நாளை வெளியாகிறது. அதோடு ரஜினியின் பிறந்தநாளான 12-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும், கார்த்திக் சுப்பராஜுக்கும் ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "அன்புக்குரிய சன் பிக்சர்ஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ், பேட்ட டீசரை ஒரே மொழியில் ரிலீஸ் செய்யும்படி, ரஜினி ரசிகர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். சில நாட்களுக்கு இந்தியா முழுவதும் அந்த டீசர் ட்ரெண்டிங்கில் இருக்கட்டும். கபாலி டீசருக்குப் பிறகு வேறெந்த தமிழ் சினிமாவும் இதுவரை இந்தியா முழுக்க ட்ரெண்ட் ஆகவில்லை. இந்தி, தெலுங்கு என தனித்தனியாக ரஜினி படங்களின் டீசர்கள் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளன. ஆனால் இந்த முறை தமிழ் மொழியில் வரும் டீசர் இந்தியாவின் அனைத்துப் பகுதியையும் ஆக்கிரமிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து ரஜினி சம்பந்தமான விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து வரும், துருவ்வின் இந்த ட்வீட், ரஜினி மீது அவர் கொண்டிருக்கும் அளவற்ற அன்பைக் காட்டுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close