#Rajininext: படத்தின் பெயர் நாற்காலி; முதல்வராக நடிக்கிறார்?

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 02:32 pm
rajini-s-next-movie-title-is-narkali

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடிக்கும் படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. 

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் முருகதாசின் கத்தி, சர்கார் படங்களை போலவே அரசியல் படமாகத் தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படங்களின் பெயர்கள் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும். நாற்காலி என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். படத்தில் ரஜினி முதல்வராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி இதுவரை எந்த படத்திலும் அரசியல்வாதியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close